மருத்துவ சமுதாய பேரவை ஆலோசனை கூட்டம் – திருவள்ளூர்
மருத்துவ சமுதாய பேரவை ஆலோசனை கூட்டம் – திருவள்ளூர்

சென்னை திருவள்ளூர் மாவட்டம் மருத்துவ சமுதாய பேரவை ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில், மாவட்ட கௌரவத் தலைவர் ஏழுமலை, மாவட்ட அமைப்புச் செயலாளர் முருகன் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சரவணன், மாநில நிர்வாகிகளையும் கிளை நிர்வாகிகளையும் வரவேற்று பேசினார், மேலும் தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநில நிர்வாகிகள் செய்திருந்தனர், அதே சமயம் உறுப்பினர்கள் படிவம் சேர்க்கை மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் நவம்பர் 20ஆம் தேதிக்குள் உறுப்பினர் படிவம் மாநில நிர்வாகிகளுக்கு ஒப்படைக்க வேண்டும், தேர்தலுக்கான விதிமுறைகள் தேர்தல் தேதி அறிவித்த பின் வெளியிடப்படும் என்று மாநிலத் தலைவர் வெங்கட் பழனி சிறப்பாக பேசினார், இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் எம் சிங்காரம், தலைமை நிலைய செயலாளர் பிரியதர்ஷன், கொள்கைகளைப் செயலாளர் திரவியம் சங்கர் சங்கத்தின் விளக்க உரையாற்றினார்கள் மற்றும் நிகழ்ச்சியில் மாநில மாவட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


கூட்டத்தின் முடிவில் பொருளாளர்
வெங்கடேசன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னதாக தியாகி விஸ்வநாததாஸ் அவர்களுடைய திருஉருவப்படத்திற்கு மாநில மாவட்ட கிளை நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்





Comments are closed.