100 சதவிகிதம் வாக்களிப்பதை வலியுறுத்தி திருச்சியில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டம் – மாவட்ட தேர்தல் அலுவலர் தொடங்கி வைத்தார்!
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 18 வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை ஜுன் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் 2024 பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று திருச்சி கோர்ட் ரவுண்டானா அருகே விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்த மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அருள், துணை ஆட்சியர் வேலுமணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம், வட்டாட்சியர் விக்னேஷ் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.