- Advertisement -

எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 21வது ஆண்டு பட்டமளிப்பு விழா – 369 மாணவர்கள் பட்டங்கள் பெற்றனர்!

0

- Advertisement -

திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 21 வது ஆண்டு பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் அல்ஹாஜ் முகமது யூனுஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் குழுமத்தின் தலைவர் (ISTE) முனைவர் பிரதாப்சிங்க் காகாசாஹெப் தேசாய் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 369 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.

Vagai
Bismi

அதில், இந்த போட்டி நிறைந்த உலகில் இன்றைய பொறியாளர்களுக்கான சவால்கள் என்ன அதை எதிர் கொள்வதற்கு தங்களை எவ்வாறு தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என விரிவாக எடுத்துக் கூறினார். வாழ்க்கை என்பது மலர் படுக்கையல்ல எனவும் எப்பொழுதும் சவால்களை சந்திக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். எந்த ஒரு செயல்களிலும் நம்முடைய அணுகுமுறையே நம்முடைய வெற்றியை தீர்மானிப்பதாகவும் அதுவே நம்மை சிறந்த பொறியாளர்களாக அடையாளப்படுத்துவதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு விடியலும் ஒரு புதிய வாய்ப்பை உருவாக்குவதாகவும் அதை எதிர்கொள்வதற்கு வெளி உலக அறிவு அவசியம் என்பதையும் தெளிவு படுத்தினார். இதற்கு இன்றைய இளைஞர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் 369 மாணவர்கள் கலந்து கொண்டு பட்டங்களை பெற்றனர். முன்னதாக இந்த வருடத்திற்கான நீதிபதி M. பக்கீர் முகமது சுழல் கோப்பையானது பல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பிடித்த மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைக்கு வழங்கப்பட்டது. மேலும் இவ்விழாவில் எம்.ஐ.இ.டி கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் முனைவர் அப்துல் ஜலீல், கல்லூரியின் முதல்வர் முனைவர் நவீன் சேட், கல்லூரியின் ஆங்கிலத் துறை பேராசிரியர் ஜீவானந்தம், கட்டிடவியல் துறை தலைவர் முனைவர் பிரேமலதா உள்பட மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாவின் ஒருங்கிணைப்பாளரான முனைவர் A. அப்பாஸ் அலி மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

 

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்