திருச்சி மாவட்டத்தில் எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமேன் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு!
அனைத்து எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்க தலைவர் சிவகுமார், திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர், அதில்,…
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து இண்டேன், ஹெச்பி, பாரத் கேஸ் ஏஜென்சிகளில் வேலை பார்க்கும் சிலிண்டர் டெலிவரி தொழிலாளர்கள் அனைவரும், சம்பளம் இல்லாமல் டிப்ஸை மட்டுமே நம்பி வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். ஆகவே தற்போதைய முறையை கைவிட்டு அனைவருக்கும் மாதம் 21,000 மாத சம்பளம் வழங்க வேண்டும். கேஸ் அடுப்பு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய சொல்லி கட்டாயம் படுத்தகூடாது. நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு கேஸ் ஏஜென்சியிலும் குறைந்தது 3 மெக்கானிக்குகள் நியமிக்கப்பட்டு நுகர்வோர்களின் கேஸ் லீக் உள்ளிட்ட பிரச்சனைகள் உடனுக்குடன் சரி செய்யப்பட வேண்டும். தற்போது மெக்கானிக் இல்லாமல் சிலிண்டர் டெலிவரி மேன்களைக் கொண்டே கேஸ் லீக் சரி செய்ய நிர்பந்திப்பதால் விபத்துகள் ஏற்பட்டு ஆங்காங்கே நுகர்வோரும் சிலிண்டர் டெலிவரி தொழிலாளர்களும் விபத்துக்குள்ளாவதை தடுக்க வேண்டும்.
சுழற்சி முறையில் சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை, வேலை நேரம் முறையாக வரையறுக்கப்பட்ட 8 மணி நேர வேலை உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்டத்தில் உள்ள இன்டேன், பாரத், ஹெச்.பி ஆகிய நிறுவனங்களில் வேலை செய்யும் கேஸ் டெலிவரி மேன்கள் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி திங்கள் கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டம் செய்வது என முடிவு செய்துள்ளோம். மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நோக்கி போராட்டத்தை கொண்டு செல்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது சங்கத்தின் மாநில செயலாளர் வெங்கடேஷ், மாநில பொருளாளர் நாகராஜன் மற்றும் டெலிவரி ஊழியர்கள் உடன் இருந்தனர்.
Comments are closed.