- Advertisement -

அதிகாரிகள் ஆய்வு செய்தாலும் தீர்வு வரும் வரை காத்திருப்போம்; இல்லையேல் அடுத்தகட்ட நடவடிக்கை வெடிக்கும்! – சுடுகாட்டுப் பாதை விவகாரத்தில் பூசாரிக்கோட்டம் மக்கள் உறுதி!

Bismi

அதிகாரிகள் ஆய்வு செய்தாலும் தீர்வு வரும் வரை காத்திருப்போம்; இல்லையேல் அடுத்தகட்ட நடவடிக்கை வெடிக்கும்! – சுடுகாட்டுப் பாதை விவகாரத்தில் பூசாரிக்கோட்டம் மக்கள் உறுதி!

சுடுகாட்டுப் பாதை ஆக்கிரமிப்பு விவகாரம்:

Vagai

செய்தி எதிரொலியால் அதிகாரிகள் கள ஆய்வு – நில அளவீடு செய்ய உத்தரவு!

 

​திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம், இனாம் சமயபுரம் பூசாரிக்கோட்டம் கிராமத்தில் பல தலைமுறைகளாகப் பயன்படுத்தி வந்த பாரம்பரிய சுடுகாட்டுப் பாதை தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யக்கூட எடுத்துச் செல்ல முடியாத அவல நிலை நிலவி வந்த சூழலில், இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்து சாலை மறியல் மற்றும் உண்ணாவிரதப் போராட்ட எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.

​இப்பிரச்சினை குறித்து ‘சோழன் பார்வை’ மாத இதழில் விரிவான செய்தியாக வெளிவந்ததைத் தொடர்ந்து, வருவாய்த்துறை நிர்வாகம் உடனடியாக விழித்துக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளது.

 

​

​செய்தியின் தாக்கத்தை அடுத்து வட்டாட்சியர் (தாசில்தார்), கிராம நிர்வாக அலுவலர் (VAO) மற்றும் ஊராட்சி மன்றச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் பூசாரிக்கோட்டம் கிராமத்திற்கு நேரடியாகச் சென்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர்.

சர்வே எண் 167/1 நத்தம் வாரிப் பாதையில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளைத் துல்லியமாக அறிய, தலைமை சர்வேயரை (Head Surveyor) வரவழைத்து முழுமையாக அளவீடு செய்ய தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.

அளவீடு முடிந்தவுடன் ஆக்கிரமிப்புகளையும், பாதையை மறித்து நிற்கும் கருவேல மரங்களையும் அகற்றி, பொதுமக்கள் எளிதாக சுடுகாட்டிற்குச் சென்று வரும் வகையில் நிரந்தரப் பாதை உடனடியாக அமைத்துத் தரப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

 

​பத்திரிகைச் செய்திக்குக் கிடைத்த உடனடி பலனாக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்துள்ளதால் கிராம மக்கள் தற்காலிக நிம்மதியுடன் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். அதே வேளையில், வெறும் வாய்மொழி வாக்குறுதியாக இல்லாமல், விரைந்து அளவீடு செய்து நிரந்தரப் பாதையை அமைத்துத் தர வேண்டும்; தாமதித்தால் அறிவித்தபடி அடுத்தகட்டப் போராட்டம் தொடரும் என்பதில் அப்பகுதி மக்கள் உறுதியாக உள்ளனர்.

​#சோழன்பார்வை

#CholanPaarvai

#சமயபுரம்

#Samayapuram

- Advertisement -

#திருச்சி

#Trichy

#மண்ணச்சநல்லூர்

#Mannachanallur

#பூசாரிக்கோட்டம்

#சுடுகாட்டுப்பாதை

#ஆக்கிரமிப்பு

#மக்கள்செய்தி

#செய்திஎதிரொலி

#கிராமமக்கள்

#போராட்டஎச்சரிக்கை

#TrichyNews

#TamilNaduNews

#SocialJustice

#PublicProtest

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்