ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த லால் சலாம் திரைப்படம் பண்டிகைக்கு வெளியாகிறது
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த லால் சலாம் திரைப்படம் பண்டிகைக்கு வெளியாகிறது
ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும்,
லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
இவருடைய காட்சி படத்தில் 20 நிமிடம் இடம்பெறும் என கூறப்படுகிறது, அந்த திரைப்படத்தில் விஷ்ணு – விஷால் விக்ராந்த் ஆகியோர் நாயகர்களாக நடிக்கின்றனர். மேலும் படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது.
படத்தில் மதத்தை மையமாக வைத்து நடக்கும் அரசியலை விமர்சித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கான காட்சி லால் சலாம் திரைப்படத்தின் ட்ரெய்லரிலும் இடம்பெற்று இருந்தது. சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த லால் சலம் திரைப்படம் வெளியாகுமா வெளியாகாதா என்ற கேள்வி நிலவி வந்தது.
ஏனென்றால் தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய திரைப்படங்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகின்றன. இதனால் விஷ்ணு விஷால் – விக்ராந்த் ஹீரோவாக நடித்திருக்கும் அந்த படம் வெளியாகுமா என்ற சந்தேகத்தை திரைத்துறையினர் எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் லால் சலாம் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். மேலும் இதில் இடம்பெறும் ரஜினிகாந்தின் கதாபாத்திரம் சில முக்கிய விஷயங்களை பேசும் என கூறப்படுகிறது. அதுவும் சில விவாதங்களை எழுப்பும் எனவும் கூறுகின்றனர்.