ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளர் மதிப்புறு மனித நேயர்க்கு பாராட்டு!
ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளர் மதிப்புறு மனித நேயர்க்கு பாராட்டு!

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அறம் மகிழ் அறக்கட்டளை பதினொன்றாம் ஆண்டு விழா காட்டுப்புத்தூர் நாராயண பிரம்மேந்திரர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.விழாவில்,அறம் அறக்கட்டளை நிறுவனர் லோகநாதன்,மருதம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் தவமணி, இயன் முறை மருத்துவ மாணவி திவ்யதர்ஷினி, சட்ட படிப்பு பயிலும் மாணவி மாயாவதி முன்னிலையில் ஆதரவற்ற நிலையில் இறந்துபோனவர்கள அனாதையாக அல்லது உரிமை கோரப்படாதப் பிணங்களை திருச்சி மாவட்டத்தில் மயானப் பூமியில் மனைவி வழக்கறிஞர் சித்ரா,மகள் கீர்த்தனா விஜயகுமார் உடன் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் கண்ணியமான முறையில் இறுதிச் சடங்குகள் செய்து நல்அடக்கம் செய்து வருகின்றார்.இவர்களது தன்னலமற்ற மனிதாபிமான சேவையைப் பாராட்டி மதிப்புறு மனித நேயர் விருது
வழங்கினார்.


Comments are closed.