திருநெல்வேலியில் நிகழ்ந்த ஆணவக்கொலை தொடர்பாக, தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் தலைவர் கிஷோர் மக்வானா, நெல்லையில் துறைசார்ந்த அலுவலர்களுடன், ஆலோசனை!
திருநெல்வேலி பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் அண்மையில், பட்டியல் இனத்தைச் சேர்ந்த கவின் செல்வகணேஷ் என்பவர், காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டார். இந்த ஆணவக்கொலை தொடர்பாக, தேசிய ஆதிதிராவிடர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா, இன்று [ஆகஸ்ட்.5] காலையில், காவல்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
திருநெல்வேலி பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் நடைபெற்ற கவின் செல்வகணேஷ் கொலை சம்பவம் குறித்து, திருநெல்வேலியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், கடந்த 1-ஆம் தேதி தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய தலைவர் தலைமையில், விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து இன்று [ஆகஸ்ட்.5] காலையில், தேசிய ஆதிதிராவிடர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா தலைமையில், தனி அலுவலர்கள் கவுரங் சாவ்தா, சன்மீத் கவுர், துணை இயக்குநர்கள் டாக்டர் தினேஷ் வியாஸ், டாக்ட்ர் ஆர்.ஸ்டாலின், தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் சென்னை இயக்குநர் டாக்டர் எஸ்.ரவி வர்மன், ஆராய்ச்சி அலுவலர் சுரேஷ், முதுநிலை ஆய்வாளர் லிஸ்டர், ஆய்வாளர் மதன் தேப் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.சுகுமார் முன்னிலையில், காவல்துறை, மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன், கலந்தாய்வு மேற்கொண்டார். அப்போது, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்து, விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளை தொடர்ந்து, தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் தலைவர் தலைமையிலான குழுவினர், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் “ஆறுமுகமங்கலம்” கிராமத்தில் உள்ள, கவின் செல்வ கணேஷ் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். முன்னதாக திருநெல்வேலியில் நடைபெற்ற, ஆலோசனை கூட்டத்தில், காவல்துறை தலைவர் சாமுண்டீஸ்வரி, நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, மாநகர காவல் நெல்லை கிழக்கு மண்டல துணை ஆணையர் வினோத் சாந்தாராம், மாவட்ட வருவாய் அலுவலர் மா. சுகன்யா, ஆதிதிராவிடர் நல அலுவலர்கள் திருநெல்வேலி பூங்கொடி, தூத்துக்குடி பென்னட் ஆசீர் உள்ளிட்ட, உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed.