- Advertisement -

திமுக ஆட்சியில் கள்ளர் சமூகத்தை சார்ந்தவர்கள் என்கவுண்டர் என்ற பெயரில் பழிவாங்கப்படுகின்றனர் – கள்ளர் முன்னேற்ற சங்க நிறுவனர் திருச்சியில் பேட்டி!

0

- Advertisement -

கள்ளர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் சரவண தேவர் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…

Bismi

சிறுகனூர் அருகே காவல்துறையினர் பிரபல ரவுடி கொம்பன் ஜெகன்(30) என்பவரை இரு தினங்களுக்கு முன் என்கவுண்டரில் சுட்டு கொன்றனர். இது திட்டமிட்டு பழி வாங்கப்பட்ட ஒரு செயல். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமையும் போதெல்லாம் இதுபோன்று கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்கவுண்டர் என்ற பெயரில் பழிவாங்கப்படுகின்றனர். என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட ஜெகனின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். காவல் துறையினர் மனித உரிமை மீறலை கையில் எடுத்துள்ளனர். எனவே நாங்கள் நீதிமன்றம் மூலமும், மனித உரிமை ஆணையம் மூலமும் திருச்சி எஸ்.பி வருண் குமார் மீது வழக்கு தொடருவோம். ஜெகன் பல குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் காவல்துறை அந்த குற்றங்கள் மீது தண்டனை பெற்றுத் தராமல் சுட்டுக் கொள்வது என்பது ஏதோ ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக செய்யப்பட்ட கொலையாக இது தெரிகிறது. கடந்த 26 ஆம் ஆண்டு முட்டை ரவி என்ற எங்களுடைய சமூகத்தை சேர்ந்த நபரை இதே போல் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் என்கவுண்டர் செய்தனர். மீண்டும் இரண்டாவது முறையாக ஜெகன் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். இது திராவிட முன்னேற்ற கழகம் தேவர்களுக்கு எதிராக செயல்படுவதை காட்டுகிறது. மற்ற சமூகங்களில் இது போன்ற குற்றவாளிகள் இல்லையா என்று கேள்வி எழுப்பிய அவர், பலருக்கு திருந்தி வாழ்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது, பலர் ஆயுள் தண்டனை பெற்று சிறைக்குள் இருக்கின்றனர். அப்படி இருக்கும் நிலையில் ஜெகனை மட்டும் என்கவுண்டர் செய்ய காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.
எனவே இந்த என்கவுண்டரை நாங்கள் சாதாரணமாக விடப் போவதில்லை பல கட்ட சட்ட ரீதியான முயற்சிகள் மேற்கொண்டு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்