- Advertisement -

5 பல்நோக்கு அலுவலக கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார் -கே.ன்.நேரு

- Advertisement -

5 பல்நோக்கு அலுவலக கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார்கே.ன்.நேரு

Bismi

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில், திருவரங்கம் பகுதிக்குட்பட்ட தெப்பக்குளத் தெரு – காமு அம்மாள் தோட்டம் ஆகிய இடங்களிலும், திருவானைக்கோவில் பகுதிக்குட்பட்ட கல்மேட்டுத் தெரு – ஸ்ரீனிவாசா நகர் – வி. எஸ். நகர் ஆகிய இடங்களிலும் பொது நிதியின் கீழ் தலா 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 5 பல்நோக்கு அலுவலக கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார் . இந்தப் பல்நோக்கு அலுவலகத்தில் செயல்பட உள்ள மாமன்ற உறுப்பினர் அலுவலகம், துப்புரவு ஆய்வாளர் அலுவலகம், இ-சேவை மையம் ஆகியவற்றை பொதுமக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அப்போது கேட்டுக் கொண்டேன். இந்நிகழ்வில், திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி மேயர் திரு. மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு. லி.மதுபாலன் இ.ஆ.ப., அவர்கள், ஆகியோருடன் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்