இந்தியாவிலேயே எமர்ஜென்சியை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது திமுக தான் – திருச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு.

0

திமுக அணிகளுக்கான கருத்துரை கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்று கருத்துரை வழங்கினார். மேலும் இந்நிகழ்வில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், துணை மேயர் திவ்யா, மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில் பேசிய அமைச்சர் துரைமுருகன்…

- Advertisement -

ஆயிரம் கொடி இருந்தாலும் திமுக கொடி போல் எதுவும் இல்லை. அதை பார்க்கும் போதே ஒரு மகிழ்ச்சி வருகிறது. திருச்சியில் சற்று முன்னர் 100 அடியில் கொடியை ஏற்றினேன் – கண்டிப்பாக அசந்து போனேன். எதையும் சாதிக்கும் திறமை அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு இருக்கிறது. ஆனால் எதுவும் தெரியாதாது போல் நடிக்கும் திறமையும் அவரிடம் உள்ளது. திமுகவே முதன் முதலில் தேர்தலில் போட்டியிடுவதாக முடிவு செய்து அறிவிக்கப்பட்ட இடமும் திருச்சி தான்.
அன்பிலார், பொய்யாமொழி ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசி உள்ளேன். தற்போது மூன்றாவது தலைமுறையான மகேஸ் ஏற்பாடு செய்த கூட்டத்திலும் கலந்து கொண்டுள்ளேன்.
தமிழகத்தின் தலைநகர் மத்தியில் இருக்க வேண்டும் என்றால் அது திருச்சி தான் அப்படியும் காலம் வரும்.

இயக்கத்தின் உயிர் நாடியே தொண்டர்கள் தான். மற்ற கட்சிகளில் உயிர் நாடி உயிரோடு இல்லை. நம் இயக்கத்தின் மீது வீசிய புயல் இமயமலை மீது வீசியிருந்தால் இமயமலை சுக்குநூறாகியிருக்கும்.
ஒவ்வொரு தி.மு.க தொண்டனும் கட்சியின் காவல் தெய்வங்கள்.

இந்தியாவில் எமர்ஜெண்சியை எதிர்த்து தீர்மானம் இயற்றிய ஒரே கட்சி திமுக தான். தலைவரின் பெயரை, கட்சியை காப்பாற்றுவாரா நம் தளபதி என்று எண்ணினேன். ஒவ்வொரு இடத்திலும் உற்று நோக்குவேன், இதை நான் ஸ்டாலினிடமும் கூறி இருக்கிறேன். ஆனால் அவர் சிறப்பாக செயல்பட்டு காட்டினார். ஆனால் தலைவரையே மிஞ்சக்கூடிய அளவில் நம் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செயல்படுகிறார். கட்சி தான் முதல், பின்னர் தான் பாசம் குடும்பம் எல்லாம். அப்படி தான் கலைஞர் இருந்தார்.
உரசி பார்க்கும் குனம் மகேஸ்க்கு இல்லை. ஒதுங்கி போகிற குனம் உள்ளது. நல்ல பன்பாடு அவரிடமும் உள்ளது. வாத்தியார்களை சமாளிப்பது மிகவும் கஷ்டம். இளம் வயதாக இருந்தாலும் ஆசிரியர்
போராட்டத்தை இனிமையாக முடித்து வைத்து விட்டார். நான் எவ்வளவு நாள் இருப்பேனோ தெரிய வில்லை ஆனால் எனக்கு பின்னாலும் கட்சி கண்டிப்பாக ஓகோ என்று இருக்கும். நான் நிம்மதியாக இருப்பேன் என்று பேசினார். இந்த கருத்தரங்கில் திமுக அணிகளை சேர்ந்த 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்