பாஜகவின் போராட்டங்களை ஆர்ப்பாட்டங்களை தடுத்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் டிஜிபி மற்றும் காவல்துறையின் வேலையாக உள்ளது – திருச்சியில் எச்.ராஜா பேட்டி!

4

- Advertisement -

பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா திருச்சி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…

பாஜகவின் போராட்டங்களை ஆர்ப்பாட்டங்களை தடுத்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் டிஜிபி மற்றும் காவல்துறையின் வேலையாக உள்ளது. ஆனால் ஆளுநருக்கு எதிரான அவப்பெயரை உண்டாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லை.

ஆர்.எஸ்.எஸ், பாஜக மற்றும் பல்வேறு ஜனநாயக அமைப்பினர் நெருக்கடி நிலையை எதிர்த்து 1970 ஆம் ஆண்டுகளில் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் உதயநிதிக்கு பதவி வந்தால் போதும் என்று என்னும் ஸ்டாலின், கடந்த காலத்தில் ஸ்டாலினை தாக்க முயன்றபோது அதனை தடுத்த சிட்டிபாபு சிறையில் வாடி உயிரிழந்தது குறித்து நினைவிருக்காது.

கொலைகாரர்கள், கொள்ளைகாரர்களின் ஒட்டுமொத்த கும்பல் தான் இந்தியா கூட்டணி. இந்த சர்வாதிகார கும்பல் பற்றி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பாஜகவில் ஜாதி பாகுபாடு என்பது இல்லை, தமிழகத்தில் கிருபாநிதி தலைவராக இருந்தார். பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர் டெல்லியில் அகில இந்திய தலைவராக பங்காரு லட்சுமணன் இருந்தார். இதுபோன்று விஷமிகள் தீயசக்திகள் அரசியல் அனுபவம் இல்லாதவர்கள் பேசுவதை கண்டு கொள்ளக் கூடாது. சாக்கடையில் கல் எறிந்தால் மேலே தெளிக்கும் என்பதால் சூர்யா சிவாவை பற்றி பேசுவது தேவையில்லை.

சபையில் வாதம் செய்ய அனுமதிக்காததால் வெளிநடப்பு என அதிமுக தலைவர் கூறியுள்ளார். இந்த அரசு தீய நோக்கம் கொண்ட அரசு. விஷ சாராயம் வழக்கில் ஆட்சியர் கொடுத்த அறிக்கை என்பது முதல்வர் மற்றும் அமைச்சர் முத்துசாமிக்கு தெரியாமல் ஆட்சியர் கொடுத்துள்ளாரா என்பதை விளக்க வேண்டும்.

- Advertisement -

60 இழப்புகள் ஏற்பட்டு 120க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மறைக்க நிர்வாகமே முயற்சி செய்யும் பட்சத்தில் அரசின் நோக்கம் தவறானது. எனவேதான் சிபிஐ விசாரணை தேவை என்பதுதான் பாஜகவின் எண்ணம்.

தீய எண்ணம் கொண்ட திமுகவின் கீழ் உள்ள துறையின் சிபிசிஐடி விசாரணை என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கது அல்ல. மரியாதையாக சிபிஐ விசாரணையை ஏற்றுக்கொள்வதுதான் முதல்வருக்கு நல்லது.

40 க்கு 40 பெற்ற பின்னர் 60 உயிரிழப்புகள் ஏற்பட்டது குறித்து சுதந்திரமான விவாதம் சட்டசபையில் நடக்க அனுமதித்தால் ஏன் திமுகவுக்கு பயமா?. நெருப்புக்கோழி கண்ணை மண்ணில் புதைத்துகொண்டு உலகமே இருண்டு விட்டது போல, தமிழக முதல்வர் செயல்பாடு உள்ளது.

கமல் அரசியலில் அனுபவம் இல்லாதவர். இலவசங்கள் வேண்டாம் என்றும், திமுகவுடன் ஒருபோதும் கூட்டணி வைக்கக் கூடாது என டிவியை உடைத்தவர் கமல். தற்போது டார்ச்லைட்டை தொலைத்து விட்டு திரிந்து கொண்டிருக்கிறார்.

1743 கோடி மக்களிடமிருந்து சாராய வருமானம் என்று கூறி அடித்து பறித்த தமிழக அரசு, தயவுசெய்து சாராயத்தை தடை செய்யுங்கள். இந்தியாவில் இளம் விதவைகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் என கனிமொழி 2016 ஆம் ஆண்டு கூறிய நிலையில், 495 இளம் விதவைகளின் பின்னணி குறித்து ஆய்வு மேற்கொண்டதில் 188 பேர் விதவையானதற்கு காரணம் குடி தான் என கனிமொழியின் ஆய்வறிக்கையை இந்து நாளிதழில் வெளியிட்டு உள்ளார். இந்த விஷயங்கள் எல்லாம் முதலமைச்சருக்கு உரைக்க வேண்டாமா?

தமிழகத்தில் கள்ளுக்கடையை கொண்டு வர மாட்டார்கள் திமுகவினர். கள்ளை அனுமதித்தால் லட்சக்கணக்கான விவசாயியிடம் பணம் லஞ்சம் கேட்க முடியாது. அதனால் தான் கள்ளை அனுமதிப்பதில்லை. தமிழக மக்களை, தமிழனை குடிகாரர்களாக்கி குடிகெடுத்தது கருணாநிதி குடும்பம் தான். 20 ஆண்டுகளாக குடி பற்றி தெரியாத தமிழர்களை கள்ளுக்கடை திறந்து குடிக்கவைத்தது கருணாநிதி குடும்பம்தான். திமுக கள்ளக்குறிச்சியில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது நல்லது என்றார்.

- Advertisement -

- Advertisement -

4 Comments
  1. JamesGef says

    Hoy jugue en [url=www.es-national.casino]Ver todos los juegos[/url]

    todo claro, sin estafas.

    Bono del 150% funciono.

  2. Philipderma says

    Просто тест туда сюда

  3. forBog says

    What’s up!
    Developing a blackjack strategy for online casino play requires adapting to digital environments and random number generators. The best blackjack strategy for online casino games emphasizes consistent basic strategy and proper bankroll allocation. [url=https://blackjackstrategy.cfd/]blackjack strategy to make big money[/url] Take advantage of online casino bonuses and practice modes to refine your skills before playing with real money.
    Read the link – https://blackjackstrategy.cfd/
    blackjack strategy best move calculator
    easy blackjack strategy for small deposit
    simple blackjack strategy guide

    Have a great day!

  4. Lennyclata says

    [url=https://bdreservation.online/our-services/] Seattle corporate limo transportation [/url] offers luxurious and reliable rides for business clients, equipped with high-end amenities and professional chauffeurs to ensure a comfortable and efficient travel experience. This service specializes in airport transfers, meetings, and events, catering to the unique needs of corporate travelers in the Seattle area. – https://bdreservation.online/our-services/

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்