திருவெறும்பூர் அருகே கடன் தொல்லையால் ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
திருவெறும்பூர் அருகே கடன் தொல்லையால் ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் நவல்பட்டு பகுதியில் உள்ள ஐடி பார்க்கில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா கைகோல்பாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த வெள்ளயங்கிரி என்பவரது மகன் பொன்கார்த்திக் வயது 24 என்பவர் அண்ணா நகர் பகுதி 1 பகுதியில் 4ஊழியர்கள் சேர்ந்து தனிவீடாக வாடகைக்கு குடியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று அவருடன் இருந்த சக ஊழியர் இளையராஜா என்பவர் ஊருக்கு சென்று விட்டு தனது பையை வைப்பதற்காக வீட்டு மாடிக்குச் சென்றுள்ளார். மாடியில் உள்ள அறையில் பொன்கார்த்தி தூக்கு மாட்டி இறந்த நிலையில் கிடந்துள்ளார். தகவல் அறிந்த நவல்பட்டு போலீசார் சம்பவ இடம் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இறந்த பொன் கார்த்திக்கின் தந்தை நெசவுத் தொழில் செய்து வருவதாகவும் அவரது அண்ணன் மோகன் என்பவர் சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருவதாகவும் நவல்பட்டு போலீசார் தெரிவிக்கின்றனர்
இந்நிலையில் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது
திருவெறும்பூர் பகுதி செய்தியாளர்
ஜார்ஜ் விஜயகுமார்
Comments are closed.