நாளை ஐதராபாத்திற்கு வருகை தரும் கால்பந்து வீரர் மெஸ்ஸி உடன் புகைப்படம் எடுக்க கட்டணமா ?

நாளை ஐதராபாத்திற்கு வருகை தரும் கால்பந்து வீரர் மெஸ்ஸி உடன் புகைப்படம் எடுக்க கட்டணமா ?

அர்​ஜெண்​டினா கால்​பந்து அணி​யின் நட்​சத்​திர வீர​ரான லயோனல் மெஸ்ஸி மற்​றும் அவரது அணி​யினர் ‘கோட் இந்​தியா டூர்’ எனும் பெயரில் இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்ள திட்​ட​மிட்​டுள்​ளனர். இவர்​களு​டன், உரு​குவே கால் ​பந்து வீரர் லூயிஸ் சுவாரஸ், அர்​ஜெண்​டி​னா​வின் ரோட்​ரிகோ டி பாவ் ஆகியோ​ரும் வரு​கை தர

உள்​ளனர். இந்த குழு​வினர் நாளை (டிசம்பர் 13) முதல் 3 நாட்​கள் இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்​கின்​றனர். இவர்​கள் மும்​பை, கொல்கத்​தா, டெல்லி மற்​றும் ஹைத​ரா​பாத்​தில் நடை​பெறும் நிகழ்ச்​சிகளில் கலந்​து​ கொள்​கின்​றனர்.இதன் ஒரு கட்​ட​மாக ஹைத​ரா​பாத் உப்பல் விளை​யாட்டு அரங்​கில் நாளை (டிசம்பர் 13) நடை​பெறும் கால்​பந்து போட்​டி​யில் மெஸ்​ஸி​யும் அவரது குழு​வினரும் பங்கேற்கின்​றனர்.

Bismi

இந்த போட்​டியை காண்​ப​தற்கு தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்டி அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது. இதை ஏற்று அவர், போட்​டியை காண நேரில் செல்ல உள்​ளார். இந்​நிலை​யில், இந்த போட்​டியை காண நேரில் வரு​மாறு காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் ராகுல் காந்​தி, பொதுச் செய​லா​ளர் பிரி​யங்கா காந்தி ஆகியோரை நேற்று டெல்​லி​யில் நேரில் சந்​தித்து முதல்​வர் ரேவந்த் ரெட்டி அழைப்பு விடுத்​தார்.மெஸ்ஸி குழு​வினர் ஹைத​ரா​பாத் வரு​கை​யையொட்​டி, ஹைத​ரா​பாத்​தில் பலத்த போலீஸ் பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்யப்பட்டுள்ளது. ஹைத​ரா​பாத்​தில் உள்ள பலக்​னுமா அரண்மனை​யில் நடை​பெறும் நிகழ்ச்​சி​யிலும் மெஸ்ஸி கலந்து கொள்​கிறார். இதில் திரை​யுல​கினர், அரசி​யல் பிர​முகர்​கள், தொழில​திபர்​கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்​ளனர்.

இந்த நிகழ்ச்​சி​யில் மெஸ்​ஸியை சந்​தித்​து, அவருடன் புகைப்​படம் எடுத்​துக்​கொள்ள ரூ.10 லட்​சம் கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இதற்கு 100 பேருக்கு மட்​டுமே அனு​மதி அளிக்​க முடிவு செய்யப்​பட்​டுள்​ளது.

உப்பல் மைதானத்தில் 3 மணி நேர நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுகளில் மெஸ்ஸி பங்கேற்பார். பின்னர் நடைபெறும் அணிவகுப்பில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மெஸ்ஸியை கவுரவிப்பார். மாவட்ட செயலியில் அனைத்து வகையான டிக்கெட்டுகளும் கிடைக்கும்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்