PACL முதலீட்டாளர்களின் பணம் வட்டியுடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரி திருச்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
PACL நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களின் பணத்தை வட்டியுடன் கிடைக்க விரைவில் நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் ஆவணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முதலீட்டாளர்கள் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாடு முழுவதும் PACL என்ற நிறுவனத்தில் 5.85 கோடி மக்கள் 49.100 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் ஓய்வு பெற்ற நீதி அரசர் லோதா தலைமையிலான கமிட்டி 6 மாத காலத்தில் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்பி கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால் 7 வருடங்களாகயும் பல லட்சம் பேருக்கு பணத்தை திருப்பி தராமல் காலதாமதம் செய்து வருகின்றனர். முதலீட்டர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விரைந்து பணத்தை வட்டியுடன் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசரின் கவனத்தை ஈர்க்க இந்த ஆர்ப்பாட்டமானது நடைப்பெற்றது. மேலும் மத்திய, மாநில அரசுகள் நீதிமன்றத் தீர்ப்பை கருத்தில் கொண்டு உடனடியாக விரைந்து முதலீட்டு பணத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.