சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யோகாதின நிகழ்ச்சி நடைபெற்றது!
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யோகாதின நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் வெங்கடேஷ் முதல்வர் முனைவர் பிச்சைமணி முன்னிலை வகித்தார். துணை முதல்வர் முனைவர் ஜோதி வாழ்த்துறை வழங்கினார். துணை முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் மற்றும் PRO மோகன் பங்கேற்றனர். யோகா கிளப் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜம் வரவேற்புறையாற்றினார்.
இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளர்கள் திருச்சிராப்பள்ளி ராக் சிட்டி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை பேராசிரியர் சுந்தரராஜன், மற்றும் பேராசிரியர் பொற்கொடி மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் மாணவ மாணவிகளுக்கு யோகாசனங்களை பயிற்றுவித்தனர். இந்த யோகாசனத்தின் மூலம் கல்லூரி மாணவ மாணவிகள் உடல் ஆரோக்கியம் கல்வியில் வளர்ச்சி நினைவாற்றல் உள்ளிட்டவை மேம்படும். மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் உடற்கல்விதுறை பேராசிரியர் பிருந்தா நன்றி உரையாற்றினார்.