திருச்சி மாநகரில் தெரு நாய்களை பிடிக்கும் பணி தீவிரம்!
திருச்சி மாநகரில் தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை, தடுப்பூசி செலுத்தும் வகையில் அவற்றை பிடிக்கும் பணிகளை மாநகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. மாநகரில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்கும் பணியில் மாநகராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி கலையரங்கம் திருமண மண்டப பகுதியில் மட்டும் 6-க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து, வாகனத்தில் ஏற்றி கருத்தடை சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். இதேபோல, தில்லைநகா், மத்திய பேருந்துநிலையம், கண்டோன்மென்ட், புத்தூா், தென்னூா், பாலக்கரை, அரியமங்கலம், பொன்மலை, கே.கே. நகா், திருவானைக்காவல் என மாநகரின் பல்வேறு பகுதிகளில் நாய்களை பிடிப்பதற்காக பிரத்யேகமாக பணியாளா்கள் நியமிக்கப்பட்டு நாய்கள் பிடிக்கப்பட்டன.