கனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா.

கனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா.

Bismi

.

ங்கக் கடலில் உருவாகியுள்ள, டிட்வா புயலால், இலங்கையிலும் இடியுடன் கூடிய கனமழையும், பலத்த காற்றும் வீசி வருகிறது. திருகோணமலை, பதுல்லா, மாத்தறை, மட்டக்களப்பு, நுவரெலியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இலங்கையில் வெள்ளம், நிலச்சரிவால் இதுவரை,தொடர் மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 56 பேர் பலியாகி உள்ளனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும், 46 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேரைக் காணவில்லை என்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக 20,500 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், ஆறுகள் நிரம்பி வழிவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைப்பதற்காக கொழும்பு கிரிக்கெட் மைதானத்தை அவசரகால பேரிடர் முகாமாக மாற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. ஆபத்தான பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட 3,000 மக்களை இங்கு தங்க வைத்து, அடிப்படை வசதிகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும் என்று பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில் இலங்கைக்கு நிவாரண உதவிகளை பிரதமர் மோடி அறிவித்தார் . அதன்படி, ஆப்பரேஷன் சாகர் பந்து (Operation Sagar Bandhu ) என்ற பெயர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கிய மனிதாபிமான உதவிகளை இந்தியா செய்து வருகிறது. இந்த நிலையில், இந்திய விமானப்படை மூலம், இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். முதற்கட்ட நிவாரணப் பொருட்கள் அவசரமாக அனுப்பப்பட்டுள்ளதாகவும், கூடுதல் உதவிகளை வழங்கவும் தயாராக இருப்பதாகவும் அறிவித்தார்.அதன் அடிப்படையில் இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியது. இந்தியாவின் INS விக்ராந்த் மற்றும் INS உதயகிரி கப்பல்கள் மூலம் முதற்கட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன. கூடுதல் உதவிகளை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், டென்டுகள், தார்பாய்கள், போர்கள், மருந்து பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் என 12 டன் எடை கொண்ட மனிதாபிமான உதவி பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்