தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. நேற்று காலை 7:00 மணி அளவில் வாக்குப்பதிவு துவங்கி பொதுமக்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தில்லைநகரில் உள்ள மக்கள் மன்றத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்…
- Advertisement -
முதலமைச்சரின் உரையில் தமிழ்நாட்டு மக்களின் மனநிலை மாறி உள்ளது. மத்தியில் இந்தியா கூட்டணி வரும் என்கிற நிலைமை ஏற்பட்டு இருப்பது தான் ஒரு மகிழ்ச்சியான செய்தி. தமிழகத்தில் முதல்வர் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும்.
கருத்து கணிப்பு என்ற பெயரில் உங்களுக்கு போட்டியாக உள்ள அதிமுகவை விட பாஜக அதிக சீட்டுகளை பெறும் என்று கூறியுள்ளார்கள் என்ற செய்தியாளர் கேள்விக்கு….
ஒன்றிய அரசு அவர்களுக்கு உள்ள அதிகாரத்தை வைத்து அவர்கள் சொல்லுகிறார்கள். அப்படி எல்லாம் நடக்காது.
சேலத்தை எடப்பாடி பழனிச்சாமி தனது கோட்டை என சொல்கிறாரே என்ற கேள்விக்கு ,
சேலத்தில் செல்வகணபதி நிச்சயம் வெற்றி பெறுவார்.
தமிழ்நாட்டில் பாஜக டெபாசிட் இழப்பார்களா என்ற கேள்விக்கு,
அதற்கு நான் பதில் சொல்ல முடியாது மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்றார். இந்தியா கூட்டணி பெரும்பான்மை இடங்களில் ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி பெறும் என தெரிவித்தார்.