திருச்சி போத்தீஸ் ஜவுளி கடை மற்றும் நகை கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
திருச்சி போத்தீஸ் ஜவுளி கடை மற்றும் நகை கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

போத்தீஸ் நிறுவனத்தின் கிளைகள் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, நாகர்கோவில், புதுச்சேரி, கோவை, திருவில்லிபுத்தூர், சேலம் ஆகிய முக்கிய நகரங்களில் அமைத்துள்ளது. அதுமட்டும் அல்லாது பிற மாநிலங்களான கேரள மாநிலம் திருவனந்தபுரம், எர்ணாகுளம் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் அமைந்துள்ளது.



இந்நிலையில் வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள போத்தீஸ் அலுவலகங்கள், உரிமையாளர்களின் வீடுகளில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து திருச்சி மேலபுலிவார் சாலையில் இயங்கி வரும் பிரபலமான போத்தீஸ் ஜவுளி கடை, மற்றும் சின்ன கடை வீதி பகுதியில் உள்ள போத்தீஸ் ஸ்வர்ண மஹால் நகை கடை ஆகிய 2 இடங்களில் 2 கார்களில் வந்த வருமான வரிதுறை சேர்ந்த 6க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 8 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இப்பகுதி பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.





Comments are closed.