திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஒரு வருடம் முழுவதும் பிறந்தா நாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இதுவரை 75 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டுள்ளது. தற்போது 76வது நிகழ்ச்சியாக கலைஞர் நூற்றாண்டு விழாவின் மற்றொரு நிகழ்வாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள டிவிஎஸ் டோல்கேட்டில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலையில், திமுக இளைஞர் அணி செயலாளர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக கலைஞர் சிலையை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார்.
இந்நிகழ்வில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, கிழக்கு மாநகர செயலாளரும் மண்டல குழுத் தலைவருமான மதிவாணன் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.