- Advertisement -

டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக கல்லணை திறப்பு – அமைச்சர்கள் மலர்தூவி தண்ணீரை திறந்து வைத்தனர்!

0

- Advertisement -

டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக நேற்று முன்தினம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர் இன்று அதிகாலை கல்லணை வந்தடைந்தது. இதனை அடுத்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் நேரு, மெய்யநாதன், மகேஷ் பொய்யாமொழி, டிஆர்பி ராஜா மற்றும் ஐந்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர்களை தூவியும், நெல்மணிகளை தூவியும் தண்ணீரை திறந்து வைத்தனர்.

Bismi

Vagai

திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மாயவரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெரும் என்பது குறிப்பிடத்தக்கது. முதற்கட்டமாக காவிரியில் இருந்து 1500 கன அடியும், வெண்ணாற்றில் இருந்து 1,000 கன அடியும், கல்லணை கால்வாயில் 500 கன அடியும், கொள்ளிடத்தில் 400 கன அடியும் திறக்கப்பட்டுள்ளது. திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்