நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்க உள்ளார் என பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று தனது கட்சியின் பெயரை நடிகர் விஜய் அறிவித்தார். கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளது. விஜய்யின் அரசியல் கட்சி பெயர் அறிவிப்பை தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் ரசிகர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் விஜய் மக்கள் இயக்கத்தின் திருச்சி மத்திய மாவட்ட தலைவர் செந்தில் குமார் தலைமையில் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடப்பட்டது.