வள்ளியூர் கோல்டன் நகரில், சுமார் 10 லட்சம் ரூபாய் புதிதாக நிறுவப்பட்டுள்ள, 100 கிலோ வோல்ட் மின்மாற்றியினை பொறியாளர் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார் 

- Advertisement -

வள்ளியூர் கோல்டன் நகரில், சுமார் 10 லட்சம் ரூபாய் புதிதாக நிறுவப்பட்டுள்ள, 100 கிலோ வோல்ட் மின்மாற்றியினை பொறியாளர் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்

- Advertisement -

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட, வள்ளியூர் கோட்டத்தில் வள்ளியூர் பிரிவு அலுவலகத்திற்க்கு உட்பட்ட, “கோல்டன் நகர்” விரிவாக்க பகுதியில், வள்ளியூர் கோட்ட வளர்ச்சி மேம்பாட்டு மதிப்பீட்டு திட்டத்தின் கீழ், 9 லட்சத்து 76 ஆயிரத்து 200 ரூபாய் மதீப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள, புதிய 100 கி.வோ. மின்மாற்றி, திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேசுவரி, வள்ளியூர் கோட்ட கோட்ட செயற் பொறியாளர் வளன் அரசு ஆகியோரின் வழிகாட்டுதலில் நிறுவப்பட்டது.

தற்போது அனைத்து பணிகளும், அனைத்து சோதனைகளும் நிறைவு பெற்றுள்ள நிலையில், அதனை இன்று [ஆகஸ்ட்.2] காலையில், திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேசுவரி இயக்கி வைத்து, அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த புதிய மின்மாற்றி மூலம், புதிய மின் இணைப்பு மற்றும் சீரான மின்விநியோகம் ஆகியவற்றை வழங்க முடியும். நிகழ்ச்சியில், வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன் அரசு,வள்ளியூர் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் ஆனந்த்குமார், வள்ளியூர் பிரிவு உதவி மின் பொறியாளர் ராஜா, பணியாளர்கள் மற்றும் கோல்டன் நகர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்