திருச்சியில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாராளுமன்ற தேர்தல் முன் தயாரிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் – தொகுதி பொறுப்பாளர் பெனட் அந்தோனிராஜ் பங்கேற்பு!

0

பாராளுமன்ற தேர்தலின் முன் தயாரிப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் டி. பென்னட் அந்தோணி ராஜ் ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

- Advertisement -

மேலும் இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் முருகேசன், கலைப்பிரிவு மாநில துணைத்தலைவர் பெஞ்சமின் இளங்கோ, கள்ளிக்குடி பஞ்சாயத்து தலைவர் கே.எஸ். சுந்தரம், வட்டாரத் தலைவர்கள் ராஜா டேனியல் ராய், பிரியங்கா பட்டேல், ஐ.டி. விங் மாவட்ட தலைவர் லோகேஸ்வரன், மகளிர் அணி தலைவர் சீலா செல்ஸ் மற்றும் கோட்டத் தலைவர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்