திருச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞர் அணி சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.
திருச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞர் அணி சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.

திமுக இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆன உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்டம் மேற்கு தொகுதி திமுக இளைஞரணி சார்பில் மாநகர இளைஞரணி அமைப்பாளர் அன்பழகன் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாநகராட்சி மேயர், நகர செயலாளர் அன்பழகன் தொடங்கி வைத்தார். இதில் ஆர்வமுடன் கொண்டு ரத்த தானம் செய்தனர்.
இந்த நிகழ்வில் மாநில மாணவரணி துணை செயலாளர் பி.எம் ஆனந்த், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டான்லி, மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.