திருச்சி அரியமங்கலம் பகுதியில் புதிய காவேரி கிளினிக் – 24×7 திறப்பு விழா நடைபெற்றது
திருச்சி அரியமங்கலம் பகுதியில்
புதிய காவேரி கிளினிக் – 24×7 திறப்பு விழா நடைபெற்றது
காவேரி மருத்துவமனை குழுமத்தின் புதிய கிளினிக்
தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை அரியமங்கலம் பகுதியில் சிறப்பாக திறக்கப்பட்டது.
இந்த புதிய கிளினிக், நவீன மருத்துவ வசதிகளுடன், மக்கள் நலனுக்காக திறக்கப்படுகிறது.
காவேரி மருத்துவமனை குழுமம், தன் மருத்துவ சேவைகளின் மேம்பாடு மற்றும் மக்களின் நலனை கருதி, பல்வேறு துறைகளில் நிபுணர்களின் சேவைகளை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்த புதிய கிளினிக் திறப்பின் மூலம், மேலும் பலருக்கு மருத்துவ சேவைகள் எளிதாகக் கிடைக்க உறுதியாகிறது.
இவ்விழாவில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
காவேரி கிளினிக் – 24×7 மருத்துவமனையில்
சிறப்பு அம்சங்கள் குறித்த அறிக்கையில்
• நவீன மருத்துவ உபகரணங்கள்
• பல்வேறு துறை நிபுணர்களின் சேவைகள்
• மக்களுக்கு விரைவான மற்றும் தரமான சிகிச்சை
காவேரி மருத்துவமனை குழுமத்தின் நோக்கம், நம் சமூகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அனைவருக்கும் சிகிச்சை சேவையை எளிதாக்குவது.
எளிமையான அணுகல் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவ மையம் அருகில் உள்ள மக்களுக்கு பெரிதும் பயன்படும் என்று நம்புகிறோம்.
காவேரி மருத்துவமனை குழுவில் விரைவான மருத்துவ கவனிப்பு கிடைப்பதன் மூலம் நோய்கள் பெரிதாக மாறுவதை தடுப்பதில் முக்கிய பங்கு வசிக்கும் என்பதை பொதுமக்களுக்கு உணர்த்தும்.
காவேரி கிளினிக் – 24×7 சேவைகள்
காவேரி மருத்துவமனை கிளினிக், 24×7 செயல்படும் நவீன மருத்துவ வசதிகளை வழங்குகிறது. கீழே உள்ள மருத்துவ சேவைகள் உங்கள் நலனுக்காக எப்போதும் தயாராக உள்ளன:
•அவசர மருத்துவ சேவை: 24×7 அவசர மருத்துவ சேவை, அவசர நிலைகளுக்கு உடனடி மருத்துவ உதவியை வழங்குகிறது.
• வெளிநோயாளி ஆலோசனை (OP Consultation): நோயாளிகளின் தேவைகளுக்கு தகுந்த நிபுணர்கள் மூலம் ஆலோசனை.
• ECG மற்றும் ECHO: இதய சிகிச்சைகளுக்கான நவீன பரிசோதனைகள்.
• இரத்த மாதிரி சேகரிப்பு (Blood Sample Collection): நோயாளிகளின் பரிசோதனைகளுக்கான விரைவான மாதிரி சேகரிப்பு.
• அல்ட்ரா சவுண்ட் (Ultra Sound): உள் உறுப்புக்களின் நவீன சிகிச்சை பரிசோதனை.
• டிஜிட்டல் எக்ஸ்-ரே (Digital X-Ray): எலும்பு மற்றும் உடல் அமைப்புகளை பரிசோதிக்க நவீன எக்ஸ்-ரே வசதி.
• மருந்தகம் (Pharmacy): நோயாளிகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் கிடைக்கும்.
இந்த வசதிகள், உங்கள் உடல்நலத்தை மேம்படுத்துவதற்காக எப்போதும் உங்களுக்காக காத்திருக்கின்றன.
மேலும் தகவலுக்கு:
முகவரி: எண்.4/4A, கல்யாண சுந்தரம் தெரு,
திருச்சி – தஞ்சை நெடுஞ்சாலை, அரியமங்கலம்,
திருச்சி – 620 019.
முன்பதிவிற்கு: 0431-4077777
காவேரி மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
Comments are closed.