கீழாநிலை கோட்டையில் அரியநாயகி அம்மன் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த கீழாநிலை கோட்டையில் அரியநாயகி அம்மன் கோவில் ஆணி திருவிழா, சென்ற ஒன்றாம் தேதி காப்பு கட்டி பின்னர் தினகரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
இதில் முக்கிய விழாவான தேரோட்டம் மாலை 4:30 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி பெண்கள் அனைவரும் முளைப்பாரி எடுத்து வந்தனர் பிறகு அம்மனுக்கு வேல் கொடுத்தனர் அதனைத் தொடர்ந்து ஜீவ ஆராதனை நடைபெற்றது மேலும் 84 ஊர் கிராம மக்கள் வருகை தந்து வடம் பிடித்து இழுத்தனர் தேர் கோவில் ஆரம்பப்பள்ளி கீழாநெல்லி ஊரைச் சுற்றி கடைவீதி வழியாக மாலை ஆறு மணிக்கு நிலைக்கு வந்தது வழி நெடுக அம்மனுக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்தனர் விழாவில் சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டனர்
பொன்னமராவதி டிஎஸ்பி கண்ணன் தலைமையில்
கே புதுப்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மேற்பார்வையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
Comments are closed.