ஐயாரப்பர் திருக் கோவிலில் சப்தஸ்தான திருவிழா முக்கிய பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது

0

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஐயாரப்பர் திருக் கோவிலில் சப்தஸ்தான திருவிழா முக்கிய பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மழையை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறல்.

- Advertisement -

திருவையாறில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம் வளர்த்தநாயகி உடனாகிய ஐயாறப்பர் திருக்கோயில் உள்ளது இத்திருக் கோவிலில் ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக சுமார் 13 நாட்கள் சப்தஸ்தான திருவிழா நடைபெறும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்

கடந்த 25ம் தேதி வெகுவிமர்சையாக மேளதாள இன்னிசை முழங்க வாண வேடிக்கையுடன் கொடியேற்ற திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஐயாரப்பர் அம்பாள் சிறப்பு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஐந்தாம் நாள் திருவிழாவில் தன்னைத்தானே பூஜித்தல் மரகத லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வீதிஉலா காட்சி நடைபெற்றது. ஏழாம் நாள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கோரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஒன்பதாம் நாளில் பஞ்ச மூர்த்திகள் ஐந்து திருதேர்களில் ஐயாறப்பர் அம்பாள், முருகன், அம்மன், பிள்ளையார், சண்டிகேஸ்வரர் என எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 06 ம்தேதி நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஐயாறப்பர் அம்பாள் கண்ணாடிப் பல்லக்கிலும், நந்திகேசுவரர் சுயசாம்பிகை வெட்டிவேர் பல்லக்கிலும் எழுந்தருளித் மக்கள் வெள்ளத்தில் மிதந்து திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய 6 ஊர்களுக்கு சென்று அவ்வூரிலுள்ள சாமிகளை கண்ணாடி பல்லாக்கில் அழைத்துக்கொண்டு திருவையாறு வந்தடைந்தது. வந்தவுடன் வாணவேடிக்கை, மேலகச்சேரியுடனும் அனைத்து கண்ணாடிப் பல்லாக்கும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக அணிவகுத்து மக்கள் வெள்ளத்தில் மிதந்து மேலவீதி,கீழவீதி தேரடி வந்தடைந்தவுடன் பொம்மை பூ போடும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் பூபோடும் நிகழ்வு நடைபெற்றது. சிறப்பு தீபாராதனை முடிந்தவுடன் அனைத்து கண்ணாடி பல்லக்குகளும் திருக்கோவில்கள் சென்று மகா தீபாராதனை நடைபெற்று திருவிழா நிறைவடைந்து. விழாவின் ஏற்பாடுகளை ஸ்ரீ ல ஸ்ரீ 27வது குருமனிகள் சன்னிதானம் மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில் கோவில் நிர்வாகத்தின் பணியாளர்கள் சிறப்பாக செய்துயிருந்தனர். இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோவில்களில் கண்ணாடிபல்லாக்கு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்கள். பாதுகாப்பு பணியானது திருவையாறு துணை கண்காணிப்பாளர் ராஜ மோகன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்