2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும் – திருச்சியில் அமைச்சர்கள் பேச்சு!

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் 2 வது பொது உறுப்பினர்கள் கூட்டம் திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள தேசிய பள்ளி மைதானத்தில், கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்,

- Advertisement -

திருச்சி எப்போதும் தீரர்கள் கோட்டமாக விளங்கி வருகிறது. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி கம்யூனிஸ்ட் கோட்டையாக இருந்தது. கடந்த 1996ம் ஆண்டு பிறகு அதனை திமுக கோட்டையாக மாற்றியவர் கலைஞர் கருணாநிதி. வருகிற 2026 தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. இன்னும் சட்டமன்ற தேர்தலுக்கு ஒன்றை ஆண்டு காலம் மட்டுமே உள்ளது. எனவே அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பொது பணிகளால் தொண்டர்களுக்காக பணியாற்ற முடியாத சூழல் நிலவியது. இனி தொண்டர்களின் குடும்பத்திற்காக உழைப்போம் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், திருச்சி திமுகவின் கோட்டை என்பதை வருகின்ற தேர்தலிலும் நாம் நிரூபிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற தலைவரின் இலக்கை நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்றுவோம். அமைச்சர் உதயநிதியின் கரத்தை வலுப்படுத்துவோம் என்று பேசினார். மேலும் இந்த கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்