தமிழக சட்ட மன்ற தேர்தலில் முத்தரையர் பெரும்பான்மையாக வசிக்க கூடிய தொகுதிகளில் முத்தரையர் சமூகத்திற்க்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் – பேராசிரியர் சந்திரசேகரன்
தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம்,சிங்க தமிழர் முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் , திருச்சி, வரகனேரி, தனரெத்தினம் திருமண மண்டபத்தில் கடந்த 1-1-2026 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில், கடந்த ஆண்டு 14-12-2025 அன்று தமிழுக்கு முதன் முதலில் மெய்க்கீர்த்தி கண்டவரும், தமிழகத்தை அற வழியில் ஆட்சி செய்த ( கி.பி.705 முதல் கி.பி 745 வரை) பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பெரிதும் துணை நின்ற பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசனுக்கு அவர்களுக்கு முத்தரையர் சமூகத்தின் சார்பாக மேற்படி பொதுக்குழு கூட்டத்தில் பாராட்டி , வெள்ளி செங்கோல் மற்றும் மலர் மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
இவ்விழாவில் பேராசிரியர் சந்திரசேகரன் மத்திய அரசுக்கும்,அஞ்சல் தலை வெளியீட்டு விழா குழுவிற்க்கும் நன்றி தெரிவித்து பேசினார். அவர் தம் உரையில் டெல்லியில் முக்கிய சாலை சந்திப்பில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் சிலை அமைத்து தரவேண்டும். இந்தியாவின் தலைநகர் டெல்லியில் முக்கிய சாலைக்கு பேரரசர் பெயர் சூட்ட வேண்டும். தமிழுக்கு முதன் முதலில் மெய்க்கீர்த்தி கண்ட பேரரசர் திரு உருவ படத்தினை நாடாளுமன்ற வளாகத்தில் வைக்க வேண்டும்.

ஈராயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் தொன்மக்குடியினராகவும், காவல்கார சமூகமாக இருந்து, தமிழ் சமூகத்தின் சட்டம் ஒழுங்கை காத்தவர்கள் முத்தரையர்கள். ஆகவே அவர்களின் சேவையை கருத்தில் கொண்டு காவல்கார முத்தரையர் சமூகத்திற்க்கு மத்திய காவல் படையிலுல், இராணுவத்திலும் உரிய உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முத்தரையர் சமூகத்திற்க்கு இது வரை மாநிலங்களளை உருப்பினர் பதவி வழங்கப்படவில்லை. ஆகவே மத்திய பாஜக அரசு, திராவிட மாடல் அரசால் புறக்கணிக்கப்பட்ட முத்தரையர் சமூகத்திற்க்கு இரண்டு மாநிலங்களவை உருப்பினர் பதவி மற்றும் மத்திய அரசின் இரயில்வே வாரிய உறுப்பினர் பதிவி உள்ளிட்டவை வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் முத்தரையர் பெரும்பான்மையாக வசிக்க கூடிய தொகுதிகளில் முத்தரையர் சமூகத்திற்க்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் எனும் கோரிக்கையை பேராசிரியர் சந்திரசேகரன் வலியுறுத்தி பேசினார்.
பேராசியர் இராம ஸ்ரீநிவாசன் தனது ஏற்புரையில் மேற்க்கண்ட கோரிக்கைகள் மத்திய அரசின் கவனத்திற்க்கு எடுத்துச்சென்று பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஸா அவர்களின் ஆலோசனையுடன் விரைவில் நிறை வேற்றி தருவோம் என்று உறுதியளித்து பேசினார். பேரரசர் தர்மத்தின் வழியில் ஆட்சி நடத்தினார். அதன் வழியில் பாரத பிரதமர் இன்று அற வழியில் ஆட்சி நடத்துகிறார். ஆதலால்தான் பேரரசர் அஞ்சல் தலையை இன்று மோடி ஆட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. முத்தரையர் சமூகத்தின் இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் பாரதீய ஜனதா கட்சி நிறைவேற்றும் என உறுதி பட கூறினார்.
தமிழ் நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் அய்யா ஆர்.விஸ்வநாதன், துணைத்தலைவர் ஆர்.வி.ராம்பிரபு, மாநில இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் ஆர்.வி.பரதன்,ஆர்.வி.பாலமுருகன்,
அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பேராசிரியர் சந்திரசேகரன் மற்றும் சங்க மாவட்ட மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேராசியர் இராம ஸ்ரீனிவாசன் பேரரசர் அஞ்சல் தலை அறிமுகப்படுத்தி, பேரரசரின் பெருமைகளையும், சாதனைகளையும் , எடுத்துரைத்தார். மேலும் முத்தரயர் பேரரசின் நீர் மேலாண்மை திட்டங்கள், கட்டக்கலை,சிற்பக்கலை, குடைவரை கோயில், சிற்பக்கலையில் முத்தரையர்கள் ஆற்றிய தொண்டுகளை பதிவுசெய்தார்.





Comments are closed.