- Advertisement -

ஏற்கனவே நடந்த தேர்தல்களில் நாங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொன்னதில்லை இப்போதும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை – திருச்சியில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி!

1

- Advertisement -

திருச்சி பாராளுமன்ற தொகுதி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் கட்சியினுடைய மாநில தலைவர் செல்வப் பெருந்தகை இன்று திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…

 

 

இந்த பாராளுமன்றத் தேர்தல் தமிழ்நாடு மக்களும் ஆர் எஸ் எஸ் சித்தாந்தத்திற்கு எதிரானவர்கள் என்பதை உறுதி செய்யும் தேர்தல். பிரித்தாலும் கொள்கையை கையாளக்கூடிய பாஜகவை எதிர்க்கும் தேர்தலாகவும் இது அமையும்.

இந்த மண் சமூக விடுதலைக்கான மண். சமூக நீதிக்கான மண். ஒருபோதும் இந்த தேர்தலில் இந்திய மக்கள் இப்படிப்பட்ட பாசிச சக்திகளை அனுமதிக்க மாட்டார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உள்ளது. அதேபோல் ஒவ்வொருவருக்கும் இந்த தேசத்தின் மீதான பார்வை என்பது வேறு. வாஜ்பையை பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய தந்தையாகவும், குருவாகவும் தேசத்தின் தலைவராகவும் ஏற்றுக் கொண்டவர்கள்.

Vagai

மோடி ஏற்றுக் கொண்ட தலைவரான வாஜ்பாய் கூறுகையில் உலகத்தின் இரும்பு மனுஷன் என்று போற்றப்பட்ட இந்திரா காந்தியை துர்கா தேவி என்று கூறினார். துர்கா தேவிக்கு என்ன சக்தி இருக்கிறதோ, ஆளுமை இருக்கிறதோ, அந்த சக்தியும் ஆளுமையும் இந்திரா காந்திக்கு இருப்பதாக கூறினார். அப்படி என்றால் தலைவர் வாஜ்பாய் சொன்னது தவறா அல்லது மோடி சொன்னது சரியா.

இந்த தேசத்தின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு அடியும் பார்த்து செயல்பட்டவர் அன்னை இந்திரா காந்தி. கட்சி தீவு குறித்து பேசுபவர்கள் வெஜ் பேங்க் குறித்து ஏன் பேசவில்லை, ஏன் மறைக்க வேண்டும். வெஜ் பேங்க் என்பது என்ன அதை எதற்காக அன்னை இந்திரா காந்தி இந்திய கடல் எல்லையில் கொண்டு சேர்த்தார். வெஜ் பேங்க் என்ற பகுதியில் என்ன என்ன அபூர்வங்கள் கனிம வளங்கள் உள்ளது என்பது குறித்து இதுவரை மோடி பேசவில்லை.

எத்தனையோ விஞ்ஞானிகள் கடல் ஆராய்ச்சியாளர்கள் இருந்தாலும் வெஜ் பேங்க் குறித்து இதுவரை மோடி பேசாமல் மௌனம் சாதிக்கிறார். ஆனால் ஒன்றுமில்லாத கச்சத்தீவு குறித்து மற்றும் பேசி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது இந்தியாவினுடைய எல்லையை விரிவு படுத்தவும் வெஜ் பேங்க் மூலம் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தவும் செய்திருக்கிறார்கள்.

ஏழு லட்சம் தொப்புள் கொடி தமிழ் உறவுகள் அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். எனவே அவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே மிகப்பெரிய பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் தான் தற்போது கட்சத்தீவு தொடர்பான பிரச்சினையை இந்த மோடி கையாண்டு வருகிறார்.

எனவே கச்சத்தீவு குறித்து பேசுபவர்கள் கட்டாயம் வெஜ் பேங்க் குறித்தும் பேச வேண்டும்.

தற்போது எம்பி யாக இருக்கக்கூடிய திருநாவுக்கரசர் ஒரு நல்ல மனிதர் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்ற வருத்தம் எனக்கும் இருக்கிறது. ஆனால் தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதற்கு நாங்கள் கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும். எனவே அவர் தொடர்ந்து தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் எந்தவித பாகுபாடும் இன்றி விரைவில் ஈடுபடுவார் என்று தெரிவித்தார்.

எங்களுடைய ஒரே இலக்கு இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் என்பதுதான். இங்கு இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் பல சங்கடங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் களைந்து இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

Bismi

நிர்மலா சீதாராமனின் கணவர் பிரபாகரன் மோடி மீண்டும் ஜெயித்தால் சர்வாதிகாரியாக இருப்பார் என்று கூறி இருப்பதாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தவர்…

கடந்த பத்தாண்டு காலமாக மோடி எப்படி செயல்படுகிறார், சர்வாதிகாரி போல தானே செயல்படுகிறார். அவர் சர்வாதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக தான் சிஏஏ திருத்தச் சட்டம் லடாக் பகுதியில் 20 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை சீனாவிற்கு தாரை பார்த்து கொடுத்தது என்பது உள்ளிட்ட சர்வாதிகார செயல்பாடுகள் தான் தற்போது நடைபெற்று வருகிறது.

பிரதமர் மோடி சர்வாதிகாரி என்று நிர்மலா சித்தராமனின் கணவர் பிரபாகரன் மட்டும் கூறவில்லை. அவருடைய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமி அவர்களும் குறிப்பிட்டுள்ளார். இந்திய பிரதமராக இருப்பதற்கு தகுதியும் இல்லை இவர் சீனாவின் தூதுவராக இருக்கலாம் என்று பேசியுள்ளார்.

பாஜக அரசு வெஜ் பேங்க் குறித்து பேசாமல் இருக்கும் நிலையில் காங்கிரஸ் ஏன் அதை குறித்து பேச மறுக்கிறது என்று எழுப்பிய கேள்விக்கு?

நாங்கள் தொடர்ந்து இதை பேசி வருகிறோம் தொலைக்காட்சிகளும் தொடர்ந்து இது குறித்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நாடு வல்லரசு ஆனதற்கும் வல்லரசு ஆக வேண்டும் என்று பேசுவதற்கும் பின்னால் மிகப்பெரிய ரகசியம் இருக்கிறது. இந்த ரகசியங்களை வெளியே கூற முடியாது. ஹெவி வாட்டர் என்று ஒரு திட்டம் உள்ளது. இந்தியாவில் எப்படி இந்த திட்டத்தை வாங்க முடியும், காங்கிரஸ் ஆட்சியில் தான் அணுகுண்டு கண்டுபிடித்தோம்.

பொக்ரனில் அவர்கள் வெடித்த வெடிகுண்டு உலக நாடுகள் எல்லாம் தடை விதித்தது. இவை எல்லாம் யாருடைய கண்டுபிடிப்பு. இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்பதற்கு யார் காரணம் என்றால் இரும்பு பெண்மணி அம்மையார் இந்திரா காந்தி தான், அன்னை இந்திரா காந்தி தன்னுடைய உயிரைக் கொடுத்து இந்திய நாட்டின் கட்டமைப்பை ஒளிபடுத்தி உள்ளார்.

எனவே இந்தியா குறித்து பேசுவதற்கு மோடிக்கு எந்த வித தகுதியும் இல்லை. அண்ணாமலை என்பவர் தமிழர்களையும் தமிழ்நாட்டையும் காட்டிக் கொடுப்பவர். தமிழ்நாட்டு மக்களை காட்டிக் கொடுக்கலாமா துரோகி ஆகலாமா. பாஜகவினுடைய பாராளுமன்ற உறுப்பினர் ஷோபா கராத்தே என்பவர் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் நடந்த குண்டு வெடிப்பிற்கு காரணம் தமிழர்கள் என்று கூறுகிறார்.

தமிழர்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று மோடியும் கண்டிக்கவில்லை. தமிழகத்திற்கு தலைவரா இருக்கும் அண்ணாமலையும் வாய் திறக்கவில்லை. உடனடியாக அவரை பதவியில் இருந்து நீக்கி இருக்க வேண்டும் அல்லவா தமிழர்கள் தீவிரவாதிகளா?

20000 சதுர கிலோ மீட்டரை சீனா ஆக்கிரமிப்பு செய்து சீன மொழியில் 30 ஊர்களுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து மோடி வாய் திறக்காமல் அமைதி காக்கிறார். 2015 முன்னாள் வெளி விவகாரத்துறை செயலாளராக இருந்த ஜெய்சங்கர் கூறுகையில் கச்சத்தீவை மீட்க முடியாது அது கொடுத்தாச்சு அதில் பல ஒப்பந்தங்கள் உள்ளது என்று பேசியவர் அரசியலுக்காக இன்று பேசுகிறார் அரசியலுக்காக பேசுகிறவர்கள் நாட்டிற்காகவும் பேச வேண்டும்.

இந்தியா கூட்டணி வெல்லும் பட்சத்தில் தமிழகத்திற்கு தேவையான எல்லா நலன்களும் வளங்களும் கண்டிப்பாக வழங்கப்படும். 400 இடங்களில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். ஏற்கனவே நடந்த தேர்தல்களில் நாங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொன்னதில்லை இப்போதும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
1 Comment
  1. mitolyn official says

    **mitolyn official**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்