பெரம்பலூர் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அருண் நேருவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த திமுகவினர் மீது வழக்குப்பதிவு!

0

- Advertisement -

மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் பெரம்பலூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் நடத்தை விதிமுறை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது 50 க்கும் மேற்பட்ட கார்களில் அணிவகுத்தாக, தேர்தல் துறை அலுவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

- Advertisement -

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேருவிற்கு ஆதரவாக அனுமதி பெறாமல் 50 வாகனங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பெரம்பலூர் காவல் நிலையம் குற்ற எண் 239/24 U/S 188 IPC பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல லாடபுரம் கிராமத்தில், பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவின் தேர்தல் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில், திமுகவினர் வெடி வெடித்ததில் பொதுமக்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பெரம்பலூர் காவல் நிலையம் குற்ற எண் 240/24 U/S 286 ஐபிசி பிரிவுகளின் கீழ் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் திமுக வேட்பாளர்கள் தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக மற்ற கட்சியின் வேட்பாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்