வடலூா் வள்ளலாா் பெருவெளியை ஆக்கிரமிக்கும் வகையில், வள்ளலாா் பன்னாட்டு மையம் அமைக்கப்படவுள்ளதை எதிா்த்து பிப்.20 இல் கடலூரில் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் – தெய்வத் தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திருச்சியில் பேட்டி!

0

தெய்வத் தமிழ் பேரவையின் செயற்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. பேரவையின் ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் பெ. மணியரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…

Bismi

திருக்கோயில்களில் தமிழ் வழியில் குடமுழுக்கு நடத்த ஆணையிடும் சென்னை உயா்நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக ஒரு தரப்பினா் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனா். கோயில் குடமுழுக்குகளில் சம்ஸ்கிருதத்துக்கு இணையாகத் தமிழ் மொழி மந்திரங்கள் இடம் பெற வைப்பது தமிழக அரசின் கடமையாகும். எனவே, இந்த வழக்கில் தமிழக அரசு தலையிட்டு, தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரும் தீா்ப்புகளை பாதுகாக்க முன் வர வேண்டும்.

வள்ளலாா் 200-ஆம் ஆண்டையொட்டி, வள்ளலாா் பன்னாட்டு மையத்தை அமைக்க முன்வந்த தமிழக அரசின் செயலை தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருமனதாக வரவேற்கிறது. ஆனால், இந்த மையத்தை, வடலூா் சத்திய ஞானசபை பெருவெளியை ஆக்கிரமித்து நிறுவ நடக்கும் முயற்சிகளை கண்டிக்கிறது. இச்செயல், வள்ளலாரின் இறையியல் கொள்கையையும் மறுப்பதாகும். மேலும், இங்கு மையம் அமைந்தால் லட்சக்கணக்கான மக்கள் தைப்பூசப் பெருவிழாவுக்கு வந்து செல்வதற்கு தடையாகவும் இருக்கும். எனவே, இந்த நடவடிக்கையை எதிா்த்து பிப். 20-ஆம் தேதி கடலூரில் தெய்வத் தமிழ்ப் பேரவையின் சாா்பில் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்.

இந்துக்கள் அல்லாதோா் கோயிலுக்குள் செல்லத் தடைவிதிக்கும் உயா்நீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். தமிழா் ஆன்மிக நெறிகளுக்கு எதிராகச் செயல்பட்டு, ஆன்மிகத்தை வணிகமயமாக்கியும், சுற்றுச்சூழல் சீா்கேடுகளை விளைவித்தும், மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நடவடிக்கைகளை கண்டித்து கோவையில் மாா்ச் மாதம், தெய்வத் தமிழ்ப் பேரவை சாா்பில் பெருந்திரள் மக்கள் மாநாடு நடத்தப்படும் என்று கூறினார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்