இந்தூர் தொகுதியில் நோட்டாவுக்கு 2 லட்சத்திற்கு மேற்பட்ட ஓட்டுகள் கிடைத்ததால், நோட்டா இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
இந்தூர் தொகுதியில் நோட்டாவுக்கு 2 லட்சத்திற்கு மேற்பட்ட ஓட்டுகள் கிடைத்ததால், நோட்டா இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் தொகுதிக்கு மே 13ல் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. தேர்தலுக்கு முன்னதாக இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்சய் கன்டி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மனு பரிசீலனையின்போது தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்ற அவர், திடீரென பாஜக பக்கம் தாவினார். அதேநேரத்தில் காங்கிரசின் மாற்று வேட்பாளர்களின் மனுவும் நிராகரிக்கப்பட்டன. இதனால் காங்கிரஸ் சார்பில் அந்த தொகுதியில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில். இது பாஜகவுக்கு சாதகமாக பார்க்கப்பட்டது.
இதனால், நோட்டாவுக்கு ஓட்டளிக்குமாறு காங்கிரஸ் கோரிக்கை வைத்தது இருந்த நிலையில், இன்று (ஜூன் 4) நடைபெற்ற ஓட்டு எண்ணிக்கையில் எதிர்பார்க்கப்பட்டதை போல, பாஜக வேட்பாளர் சங்கர் லால் வாணி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். நோட்டாவுக்கு 2 லட்சத்திற்கு மேற்பட்ட ஓட்டுகள் கிடைத்து, நோட்டா 2வது இடத்தையும் பிடித்துள்ளது.