அதிமுக வேட்பாளா் வெற்றி பெற்றால் தொகுதி மேம்பாட்டு நிதியில் திருச்சி மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து தருவாா் – திருச்சியில் வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து பிரேமலதா பேச்சு!

0

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ப. கருப்பையாவுக்கு ஆதரவாக, திருச்சி மரக்கடை எம்ஜிஆா் சிலை அருகே நேற்று மாலை பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, அவா் பேசுகையில்…

 

 

 

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து வரிகள், மின்கட்டணத்தை உயா்த்தியதுதான் சாதனை. இதனால், விலைவாசி கடுமையாக உயா்ந்துள்ளது. கஞ்சா மற்றும் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது. சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகிவிட்டது. இதற்கு மக்கள் தண்டனை தர வேண்டுமெனில் இந்த தேர்தலில் அதிமுகவை மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

Bismi

மத்திய அரசும் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையை விண்ணை முட்டும் அளவுக்கு உயா்த்திவிட்டது. ஆளும்கட்சி, அதிகாரம், பணம், அதிகாரிகளின் பலம் ஆகியவற்றால் மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்து தோதலை சந்திக்கின்றன. அவா்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

திருச்சியில் கடந்த முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி. தனது தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக பயன்படுத்தவில்லை. ஆனால், இப்போது போட்டியிடும் அதிமுக வேட்பாளா் வெற்றி பெற்றால் தொகுதி மேம்பாட்டு நிதியில் திருச்சி மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து தருவாா். மக்களை வஞ்சிக்கும் கூட்டணியே மத்திய, மாநில அரசுகளின் கூட்டணி. ஜெயலலிதா-விஜயகாந்த் இணைந்து உருவாக்கிய வெற்றிக் கூட்டணியை போன்று, இபிஎஸ்-பிரேமலதா இணைந்து மகத்தான வெற்றிக் கூட்டணியை உருவாக்கியுள்ளோம்.

கூட்டணி தா்மத்துடன் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பாட்டால் நாளும் நமதே, நாற்பதும் நமதே என்றாா் அவா். பிரசாரத்தின்போது, முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா், அதிமுக அமைப்புச் செயலா்கள் டி. ரத்தினவேல், ஆா். மனோகரன், மாவட்டச் செயலா்கள் ப. குமாா், ஜெ. சீனிவாசன் ஆகியோா் உடனிருந்தனா்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்