திருச்சி நாடாளுமன்ற தொகுதி மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வேன் – அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் வாக்குறுதி!

0

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக கூட்டணி சார்பில் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். இவர் வேட்புமனு தாக்கல் செய்த நாளில் இருந்து தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் இன்று திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முதலியார் சத்திரம், காஜாபேட்டை, எடத்தெரு, பருப்புகாரத் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குக்கர் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

 

- Advertisement -

அப்போது வேட்பாளர் செந்தில்நாதன் பேசுகையில்….

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்த மண்ணின் மைந்தனான என்னை பெய்வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தால் குடிநீர் பிரச்சனை உள்பட திருச்சி தொகுதி மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வேன்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து மற்ற மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எனது அலுவலகங்களில் புலம் பெயர் தொழிலாளர் நல மையம் அமைக்கப்பட்டு உதவிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் திருச்சி மற்றும் கந்தர்வகோட்டையில் மத்திய அரசின் புதிய தொழிசாலைகள் அமைத்து தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த பிரச்சாரத்தின் போது அமமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்