திமுகவை வீழ்த்த வேண்டும் என்கிற த.வெ.க தலைவர் விஜய்யின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் – திருச்சியில் சீமான் பேட்டி!
திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்…
அரசியலில் நாம் தமிழர் கட்சி தணித்துதான் போட்டியிடுவோம். மற்ற காட்சிகளை போல தேர்தல் நேரத்தில் விலை போவதற்கு நாங்கள் அரசியல் வியாபாரிகள் அல்ல, நாங்கள் அரசியல் போராளிகள். நாங்கள் இங்கு இருக்கும் தலைவர்களை பார்த்து அரசியலுக்கு வந்தவர்கள் இல்லை என்றார்.
2026 தேர்தலில் திமுகவுக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் தான் போட்டி என விஜய் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு,
அதை நான் வரவேற்கிறேன். திமுகவுடன் மோதி அதை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் தம்பி விஜய்யின் நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் என் எதிரியை நான் தனியாக தான் சந்திப்பேன். யாருடனும் கூட்டு சேர்ந்து எதிரியை சந்திக்க மாட்டேன். நாங்கள் வீரர்கள் தனித்து தான் எதிர்ப்போம். கூட்டணி வைத்தால் தான் அரசியலில் வெற்றி பெற முடியும் என்பது மரபா? சட்டமா? என கேள்வி எழுப்பினார்.
Comments are closed.