நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி 2012 ஆம் ஆண்டு வெளியான ‘நான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். நான் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. நான் படத்திற்கு பிறகு சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களில் நடித்தார். சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் படம் மக்களிடையே கொண்டாடபட்டது.
விஜய் ஆண்டனி திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் பிச்சைக்காரன். அதற்கடுத்து கொலை, ரத்தம், பிச்சைக்காரன் 2 போன்ற படங்களில் நடித்தார் விஜய் ஆண்டனி.
- Advertisement -
இந்நிலையில் அடுத்ததாக விநாயக் வைத்தியநாதன் இயக்கி இருக்கும் ரோமியோ படத்தில் நடித்துள்ளார். மிருணாலினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு போன்ற பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் ரோமியோ படத்தை தயாரித்துள்ளது. பரத் தனசேகர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
ரோமியோ படம் வருகின்ற ஏப்ரல் 11 அன்று வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் ரோமியோ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரோமியோ திரைப்படத்தின் கதாநாயகன் கதாநாயகி உள்ளிட்டோர் பங்கேற்று படத்தின் சுவாரசியங்கள் குறித்து விளக்கினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜய் ஆண்டனி கூறுகையில்..,
ரோமியோ திரைப்படம் காதல் குறித்து விளக்குகிறது. திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவி இடையே காதல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த படம் விளக்குகிறது.
காதல் என்பது டூ கே கிட்ஸ் 9 கே கிட்ஸ் 80 கிட்ஸ் என இல்லாமல் காதல் என்பது அனைவருக்கும் ஒன்றுதான் அனைத்து வயதினருக்கும் ஒன்றுதான்.
அனைத்து விதமான மொழிகளில் வரும் படங்களும் தமிழ் சினிமாவில் வெற்றி பெறுவது வரவேற்பு கூறியது. மொழிகளை தாண்டி படங்கள் வெற்றி அடைவது கலாச்சார வளர்ச்சி என நினைக்கிறேன்.
அரசியலுக்கு வரும் எண்ணம் தற்போது வரை இல்லை. அனைவரும் சேர்ந்து அரசியலுக்கு அழைத்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்.
உயிரிழப்புகள் என்பது அனைத்து துறைகளிலும் இருக்கிறது அனைவரும் உடல் நலத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.
வருகின்ற மக்களவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். 90 சதவிகிதம் வாக்கு அனைவரும் செலுத்த வேண்டும். நோட்டாவிற்கு வாக்களிக்கக் கூடாது என்பது என்னுடைய நிலைப்பாடு. ஒர்ஸ்டில் பெஸ்ட் என்று ஒன்று இருக்கும். அதற்கு வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு தேர்தலுக்கும் வாக்கு சதவீதம் அதிகரித்து வருகிறது.
கண்டிப்பாக நடிகர் சங்க கட்டிடத்திற்கு உதவுவேன் என கூறினார்.