சுவாமி விவேகானந்தர் நேஷனல் இன்ஸ்பிரேஷன் அவார்ட் 2026 விருதினை என் குடும்பத்தினருக்கும், அன்பு தம்பிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன் – பஜக மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் இளைஞர் அணி AS கார்த்திகேயன்
சுவாமி விவேகானந்தர் நேஷனல் இன்ஸ்பிரேஷன் அவார்ட் 2026 விருது தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் இளைஞர் அணி AS கார்த்திகேயன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

இது குறித்து அவர்களிடம் கேட்டபோது,

தி இந்தியா ஃபோரம் என்ற ஒரு நிறுவனம் மூலமாக வரவிருக்கும் விவேகானந்தர் ஜெயந்தி & தேசிய இளைஞர்கள் தினம் ஆகியவை முன்னிட்டு வருடம் தோறும் இளைய சமுதாயத்தை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது அந்த வகையில் 2026 ஆம் ஆண்டிற்கான *சுவாமி விவேகானந்தர் நேஷனல் இன்ஸ்பிரேஷன் அவார்ட் 2026* என்ற விருதை எனக்கு வழங்கி கௌரவித்துள்ளது எனக்கு இத்தகைய வாய்ப்பை வழங்கிய தி இந்தியன் ஃபோரம் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை உறித்தாக்கி கொள்கிறேன் மேலும் இந்த விருதினை வழங்கும் குழுவில் நான் பெறும் மதிக்கக்கூடிய எனது மானசீக குருநாதர் டாக்டர் ஹச். வி. ஹன்டே முன்னாள் அமைச்சர் அவர்கள் இந்த குழுவில் இருப்பது தனிச்சிறப்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் நிகழ்ச்சிமிகு தருணம் இது இத்தகைய நிலைக்கு நான் வருவதற்கு உறுதுணையாக இருந்த என் குடும்பத்தினருக்கும் என்னுடன் என்றும் பயணிக்கும் என் அன்பு தம்பிகளுக்கும் இந்த விருதினை சமர்ப்பித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.
சுவாமி விவேகானந்தர் நேஷனல் இன்ஸ்பிரேஷன் அவார்ட் 2026 விருது பெற்றுள்ள நிலையில் அவரது குடும்பத்தினர், அன்பு தம்பிகள் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.





Comments are closed.