கனவு கண்ட மகத்தான மகாகவியின் சொற்களை மனதில் ஏந்துகிறேன்- மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன்

கனவு கண்ட மகத்தான மகாகவியின் சொற்களை மனதில் ஏந்துகிறேன்- நீ கட்சி தலைவர் கமல்ஹாசன்

Bismi

இந்தியாவைக் கனவு கண்ட மகத்தான கவிஞன் பாரதியின் பிறந்த நாள் இன்று.இந்திய திருநாட்டின் நாடாளுமன்ற வளாகத்தில் நின்றபடி மகாகவியின் சொற்களை மனதில் ஏந்துகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்திய மக்கள், எல்லாரும் எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர்”- என அனைவரையும் உள்ளடக்கிய வலிமையான இந்தியாவைக் கனவு கண்ட மகத்தான கவிஞன் பாரதியின் பிறந்த நாள் இன்று. டிசம்பர் குளிரில் இந்தியத் திருநாட்டின் நாடாளுமன்ற வளாகத்தில் நின்றபடி மகாகவியின் சொற்களை மனதில் ஏந்துகிறேன். இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்