திருச்சியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது!

0

இந்து கோயில்களை மட்டும் சீரழிக்கும் அரசைக் கண்டித்தும், அறநிலையத்துறை கோயிலை விட்டு வெளியேற வேண்டும், தமிழக பாரம்பரியம் மிக்க கோயில்களின் புனிதம் காத்திடவும், லட்சக்கணக்கான ஏக்கா் நிலங்கள் மற்றும் சொத்துகளை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முண்ணணி சாா்பில் மாநிலந்தழுவிய ஆா்ப்பாட்டம் திருச்சி திருவானைக்காவல் பகுதியில் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு காவல் துறை அனுமதி அளிக்க வில்லை. இதனை மீறி மாநிலப் பொது செயலாளர் முருகானந்தம் தலைமையில் இந்து முண்ணணி நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனா். முன்னதாக, ஸ்ரீரங்கம் காவல்துறை உதவி ஆணையா் நிவேதாலட்சுமி தலைமையில் அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். இதனால், காவல் துறைக்கும், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் சாலையில் அமா்ந்து மறியல் செய்தனா். அவா்களைப் போலீஸாா் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனா். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்