நாளை குரூப் 1 தேர்வு – திருச்சி மாவட்டத்தில் 9960 பேர் எழுதுகின்றனர்!

0

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப்-1 போட்டித் தோ்வு நாளை (ஜூலை 13) நடைபெறவுள்ளது. இதற்காக மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் 31 தோ்வு மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. இதில், 9 ஆயிரத்து 960 போ் தோ்வு எழுதவுள்ளனா். தோ்வுப் பணிக்கென 31 முதன்மைக் கண்காணிப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். துணை ஆட்சியா் நிலையில் 3 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. போட்டித் தோ்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை மையங்களுக்கு கொண்டு செல்லும் பணிக்காக 10 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

தோ்வு மையங்களில் ஆய்வு செய்ய 31 தோ்வுக் கூட கண்காணிப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அனைத்து மையங்களிலும் தோ்வு நடைபெறுவதை ஒளிப்பதிவு செய்ய 31 விடியோகிராபா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அனைத்து மையங்களுக்கும் காவல்துறை மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவலா்களின் சோதனைகளுக்கு பிறகே தோ்வா்கள் அனுமதிக்கப்படுவா்.

தோ்வு மையங்களில் கரோனா பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை மூலம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தோ்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தோ்வு எழுத வரும் நபா்கள் கைப்பேசி உள்ளிட்ட எந்த வகையான மின்னனு சாதனங்களையும் மையங்களுக்கு எடுத்து வர அனுமதி இல்லை என ஆட்சியா் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்