- Advertisement -

துவாக்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மளிகை கடை உரிமையாளர் கைது!

0

- Advertisement -

திருச்சி மாவட்டம், துவாக்குடி செடிமலை முருகன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஜெ. மோகன்ராமன் (29). இவா் அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளாா். இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக எஸ்.பி. தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு வந்த எஸ்.பி. தனிப்படை போலீஸாா், கடையைச் சோதனையிட்டதில், அங்கு புகையிலைப் பொருள்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், மோகன்ராமனை துவாக்குடி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா். இதனடிப்படையில் துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, மோகன்ராமனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்