- Advertisement -

திருமயத்தில் போர்ட் ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்: 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்!

Bismi

திருமயத்தில் போர்ட் ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்: 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்!

​திருமயம்:

Vagai

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில், போர்ட் ரோட்டரி சங்கம் மற்றும் காரைக்குடி குளோபல் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.

 

- Advertisement -

​இம்முகாமிற்கு போர்ட் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மருத்துவர்கள் பூங்குன்றன், வளர் நிலா, சங்கச் செயலாளர் ராஜு மற்றும் பொருளாளர் முகமது அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போர்ட் ரோட்டரி சங்கத்தின் பட்டைய தலைவர் கபூர் முகாமை முறைப்படி துவக்கி வைத்தார்.

​காலை முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில், பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று பயனடைந்தனர்.

​முகாமின் நிறைவாக ஸ்டாலின் பாக்கியராஜ் நன்றி கூறினார். இதில் காரைக்குடி குளோபல் மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் போர்ட் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

#Thirumayam #Pudukkottai #FreeMedicalCamp #RotaryClub #GlobalHospital #HealthCamp #RotaryInternational #PudukkottaiNews

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்