கே.எம்.சி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

- Advertisement -

கே.எம்.சி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

திருச்சி நவலூர் குட்டப்பட்டு அருகே அமைந்துள்ள கே.எம்.சி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த் சயின்ஸ்-ன் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

விழாவில் பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், திருச்சிராப்பள்ளி, இயக்குனர், முனைவர் ஆஷித்.கே.பர்மா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

- Advertisement -

மற்றும் சென்னை மீனாட்சி காலேஜ் ஆஃப் நர்சிங் முதல்வர் டாக்டர் ஃபேபியோலா மெர்சி தனராஜ் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார் .

 

முன்னதாக கல்லூரியின் முதல்வர் டாக்டர் A.ராஜாத்தி Ph.D, அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார்.

இளநிலை மற்றும் முதுநிலை தேர்வில் வெற்றி பெற்ற 220 மாணவ மாணவியர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வருகை தந்து பட்டங்களை பெற்றனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக பட்டதாரிகள் உறுதிமொழி ஏற்றனர். இவ்விழாவினை கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்