தேர்வில் வெற்றி பெற்றும் பணி வழங்காத திமுக அரசை கண்டித்து, திருச்சியில் கருப்பு பட்டை அணிந்து பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்!

- Advertisement -

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக, பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய பயிற்றுநர் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டு, தேர்ச்சி பெற்ற 3192 ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்து, உத்தேசபட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டு ஓராண்டு முடிந்தும் பணி வழங்காமல் திமுக அரசு பட்டதாரி ஆசிரியர்களை வஞ்சித்து வருவதாக கூறி, தமிழகம் முழுவதும் இருந்து பட்டதாரி ஆசிரியர்கள் 400க்கும் மேற்பட்டோர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

- Advertisement -

மேலும் காலம் தாழ்த்தாமல் 3192 ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும். இல்லையென்றால் பட்டதாரி ஆசிரியர்களை கருணை கொலை செய்யக்கோரி ஜனாதிபதிக்கு தபால் மூலம் மனு அனுப்ப உள்ளோம் என தெரிவித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்