மூன்று மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து திருச்சியில் அரசு மருத்துவா்கள் கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம்!
திருச்சி அரசு மருத்துவமனையில் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றும் நிரந்தர மருத்துவா்கள் 23 பேருக்கு கடந்த 3 மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் மருத்துவா்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். எனவே, மருத்துவா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்குவதுடன், இனிவரும் காலங்களில் காலதாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவமனை வளாகத்தில் கருப்பு பட்டை அணிந்து திங்கள் கிழமை ஆர்ப்பாட்டத்தில்ஈ டுபட்டனர். மாநில அமைப்புச் செயலாளா் மருத்துவா் அருளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட செயலாளா் மருத்துவா் தங்கவேலு, மாநில நிா்வாகி காா்த்திகேயன் உள்பட மருத்துவா்கள் பலர் கலந்து கொண்டனா்.