சென்னையில் தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. மே மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,725 க்கும், ஒரு சவரன் ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.53,800 க்கும் விற்பனையானது. நேற்றும் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.6,795-ம், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.54,360-க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்து ஒரு சவரன் 54,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.6770-க்கும் விற்பனையாகிறது.