திருச்சி அரசு மருத்துவமனையில் வெப்ப அலை சிறப்பு சிகிச்சைப் பிரிவு திறப்பு – 12 படுக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவமனை முதல்வர் நேரு பேட்டி!

0

- Advertisement -

வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்குவதற்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் வெப்ப அலை சிறப்பு சிகிச்சைப் பிரிவு திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு மருத்துவமனை முதல்வர் நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில்….

- Advertisement -

தற்பொழுது திருச்சி மாவட்டத்தில் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் அதிகமான வெப்ப அலைகள் பொதுமக்களை வாட்டி கொண்டிருக்கிறது. இதனால் உடலில் நிறைய பிரச்சனைகள் ஏற்படுகிறது. வியர்வை அதிகமாக வெளியேறுவதால் உடலில் அசதி, மயக்கம், தலைச்சுற்றல், வாந்தி, இருதய பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஏற்கனவே ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளவர்கள், வயதானவர்கள், பெண்கள், கர்ப்பிணி பெண்கள், முக்கியமாக குழந்தைகள் இவர்களெல்லாம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

மேலும் கட்டுமான பணியில் ஈடுபடும் தொழிலாளர்களும் இந்த வெயில் காலத்தில் மிகவும் பாதிக்கப்படுகின்றார்கள். இவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தலையில் துணி கட்டிக்கொள்ளள வேண்டும் அல்லது தொப்பி அணிந்து கொள்ள வேண்டும். உடலில் பருத்தி ஆடைகள் அணிந்து கொள்ளலாம்.

கருப்பு நிற துணிகள் வெப்ப அலைகளை அதிகமாக ஈர்த்து கொள்வதால் நமது உடலில் அதிகமான வெப்பம் உண்டாகும், அதனால் வெள்ளை நிற துணிகளை அணிவது நல்லது. முழுக்கை சட்டை அணிய வேண்டும். தலையில் தொப்பி அணிய வேண்டும்.

வெளியில் செல்லும் பொழுது குடை மற்றும் இரண்டு லிட்டர் தண்ணீர் பாட்டில் எடுத்து செல்வது நல்லது. இதன் மூலம் தாகத்தை தீர்த்து கொள்வது மட்டுமல்லாமல், உடலில் இருந்து ஏற்படக்கூடிய உப்பு சத்து மற்றும் மற்ற குறைபாடுகள் அனைத்தையும் குறைத்து கொள்ளலாம். வியர்வை அதிகமாகும் பொழுது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தின் அளவு குறையும். இதனால மயக்கம் ஏற்படும். இதை தவிர்க்க மேலே சொன்ன விஷயங்களை கடைபிடித்தால் போதுமானது.

காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணி வரை தொடர்ந்து ஒரே இடத்தில் வேலை செய்தால் கண்டிப்பாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக ஏற்படும். அதற்கு பதிலாக இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நிழலில் ஓய்வெடுத்து விட்டு வேலை செய்வது வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும்.

தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி அரசு மருத்துவமனையில் 12 படுக்கைகளுடன் வெப்ப அலை சிறப்பு சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு 4, குழந்தைகளுக்கு 4, கர்ப்பிணி பெண்களுக்கு 4 என 12 படுக்கைகள் மருத்துவ வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது. உடனடியாக தீவிர சிகிச்சை அளிப்பதற்கு ஒவ்வொரு படுக்கையிலும் அனைத்து மருந்துகளும் உடனே செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் தேவையான மருந்துகள், குளிர்சாதன பெட்டி, ஐஸ் கட்டிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்